அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்  
எண். 30, தெற்கு மாட வீதி, திருமயிலை, சென்னை - 600 004. போன் : 044 - 24611393

  • முகப்பு
  • தலபுராணம்
  • தரிசன நேரம்
  • அபிஷேகம்
  • புகைப்படம்
    • வைகாசி பெருவிழா
    • ஆடி பூரம்
    • நவராத்திரி
    • கந்த சஷ்டி
  • திருவிழாக்கள்
  • தொடர்பு கொள்ள
முகப்புதலபுராணம் அபிஷேகம்

வழிபடும் முறையும் அதன் நன்மைகளும்.


செல்வ விநாயகர்

அருள்மிகு செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தென் திசை நோக்கி உள்ளார் சித்தி புத்தியுடன் பெரிய விநாயகர் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி உள்ளார்.

இந்த விநாயகரை வழிபட்டால் சகல செல்வங்களும் சகல நன்மைகளும் அருள்பாவிக்கின்றார்.

இவரை அனைத்து நாட்களிலும் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

அபிஷேக காலம்: காலை 8 மற்றும் 11 மணிக்கு.
அபிஷேக கட்டணம் ரூ.350.


அருள்மிகு வெள்ளீசுவரர்

அருள்மிகு வெள்ளீசுவரரின் பானம் சுயம்பு வடிவமானது.சுயம்பு பானம் அல்லது சுயம்பு லிங்கம் உள்ள கோயில்கள் மிக சிறப்பு வாய்ந்தது.இவரை வழிபட்டால் இழந்த பொருட்செல்வங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.இவரை திங்கள்கிழமை(சோமவாரம்), வெள்ளிக்கிழமை (சுக்கிரவாரம்), ஆறு வாரம் வந்து வணங்கினால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், இங்கு ஒவ்வொரு மாத பெளர்ணமியும் மிக விசேஷமாக மூலவருக்கு மருக்கொழுந்து,சந்தனம், முக்கனி, திரட்டிப்பால், சக்கரை, அப்பவகைகள்(நிறைமணிக்காட்சி) அன்னாபிஷேகம், நெல்பொறி, பசுநெய் சாத்துதல்,தேன், இளவெள்ளீர் அபிஷேகம் கம்பளம் சாத்துதல், பசுந்தயிர் அபிஷேகம் நடை பெரும்.இவரை அனைத்து நாட்களிலும் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

விசேஷ தினங்கள்:

1. திங்கட்கிழமை சோமவாரம்

2. வெள்ளிக்கிழமை சுக்கிரவாரம்

3. வளர்பிறை பிரதோஷம்

4. தேய்பிறை பிரதோஷம்

5. சிவராத்திரி

6. திருவாதிரை தினங்கள் சிறப்பான நாட்கள்


அபிஷேக காலம்: காலை 8 மற்றும் 11 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


அம்பாள்:

அருள்மிகு காமாட்சி அம்பாள் திங்கள் கிழமை வழிபட்டால் திருமணத்தடை, உடல் ஆரோக்கியம், வியாபாரத் தடைகள், நம் வாழ்வில் உள்ள அனைத்து சங்கடங்கள் தீரும்.

அம்பாளை அனைத்து நாட்களிலும் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடலாம்.


விசேஷ தினங்கள்:

1. திங்கட் கிழமை - சோமவாரம்

2. செவ்வாய் கிழமை - மங்களவாரம்

3.வெள்ளிக்கிழமை - சுக்கிரவாரம்

4.பூரம் நட்சத்திரம்

5.ஆடி வெள்ளிக்கிழமைகள்

6.தை வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷம்


அபிஷேக காலம்: காலை 8 மற்றும் 11 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


முருகர்:

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.இவரை சென்பக மலரால் அர்சனை செய்தால் அனைத்து சத்துருக்கள்(எதிரிகள்) விலகிச் செல்வார்கள்.இவரை அனைத்து நாட்களிலும் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

விசேஷ தினங்கள்:

1. விசாகம் நட்சத்திரம்

2. வளர்பிறை சஷ்டி திதி

3. தேய்பிறை சஷ்டி திதி

4. கிருத்திகை நட்சத்திரம்

அபிஷேக காலம்: காலை 8 மற்றும் 11 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


துர்க்கை:

அருள்மிகு துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் நவக்கிரக தோஷம், கொடிய நோய் நொடிகள் அகலும்.எலுமிச்சை மாலை, செவ்வரளி பூவினால் மாலை அனிவித்து 9 வாரம் பூஜை செய்து வந்தால் தோஷங்களும் நீங்கி விடும்.

விசேஷ தினங்கள்:

செவ்வாய் கிழமை - ராகு காலம் (மாலை 3.00 முதல் 4.30 மணி.)

வெள்ளிக் கிழமை - ராகு காலம் (காலை 10.30 முதல் 12.00 மணி.)

அபிஷேக காலம்: காலை 8 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


தட்சிணாமூர்த்தி:

அருள்மிகு தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் வணங்குவோர்க்கு வியாபாரத்தடை, கல்வி தடை, திருமனாத் தடை போன்ற தடைகள் நீங்கும்.கொண்டைக்கடலை மாலை வியாழக்கிழமை அன்று சாத்தி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.மஞ்சள் வஸ்திரம் அனிவித்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்.முல்லை மலரால் அர்சனை செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

இவரை வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் அர்சனை செய்து வழிபடவும்.

உகந்த பிரசாதம்:

எலுமிச்சை சாதம்,

வெள்ளை மூக்கடை சுண்டல்.

அபிஷேக காலம்: வியாழக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


அருள்மிகு வாராகி:

அருள்மிகு வாராகி அம்மனை தேய்பிறை, வளர்பிறை, பஞ்சமி திதிகளில் வழிபட்டால் திருமண தடைகள், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு நன்மைகள் செய்வாள், உகந்த பிரசாதம் நிலத்தின் கீழ் விளையும் கிழங்கு வகைகள் அனைத்தும் படைத்து நமக்கு தேவையான வேண்டினாள் நமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வாள். மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமண தடை அகலும். கிழங்கு வகைகளை சமர்ப்பித்து வணங்கினால் நிலம் சம்மந்த பிரச்சனை அகலும்.

விசேஷ தினங்கள்:

தேய்பிறை பஞ்சமி மிக விசேஷமானது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபடலாம்.

அபிஷேக காலம்: தினமும் காலை 8 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350.


அருள்மிகு பைரவர்:

அருள்மிகு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அமாவாசை, திதிகளில் அபிஷேகம் அர்ச்சனைகள் செய்தால் எதிரிகளின் தொல்லைகள் மற்றும் மாந்திரிக செய்வினைகள் அனைத்தும் நம்மை விட்டு விளக்கச்செய்வார்.

பைரவருக்கு ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடலாம் எதிரிகள் தொல்லை தீரும்.

பைரவருக்கு அஷ்டமி திதிகளில் புனுக்கு, அர்தர் ஆகிய வாசனை திரவியங்கள் சாத்துதல் வடைமாலை சாத்துதல் தயிர் சாதம் பிரசாதம் நெய்வேதியம் செய்து வந்தால் 9 வாரம் அல்லது 6 வாரத்தில் தங்களுடைய அனைத்து பிரச்சனைகள் தீர்ந்து விடும் பைரவரை வழிபட வழிபட வாழ்க்கைக்கு தேவையான நல்ல குருவும், நல்ல துணைவியும், நல்ல குழந்தைகள் அமையும்.


பைரவருக்கு உகந்த பிரசாதம்:

உளுந்து வடை மாலை.

தயிர் சாதம்.

விசேஷ தினம்:

தேய்பிறை அஷ்டமி

அபிஷேக காலம்: காலை 8 மணிக்கு.

அபிஷேக கட்டணம் ரூ.350


அருள்மிகு சுக்கிரேஸ்வரர் :

அருள்மிகு சுக்கிரேஸ்வரர் சன்னதியில் சுக்கிராச்சாரியார் குருந்த மரத்தின் கீழ் உள்ள சிவனை வழிபட்டு சுக்கிராச்சாரியார் இழந்த கண்ககளை மீண்டு கண் ஒளி பெறப்பட்ட ஸ்தலம் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 6 வரம் சுக்கிரேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கண் பார்வை தடை நீங்கும் .

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 9 மணிவரையிலும் சுக்கர தோஷம் உள்ளவர்கள் அருள்மிகு சுக்கிரேஸ்வரருக்கு அர்சனை செய்து வழிபடவும்

வழிபடும் முறை :

6 வாரம் வரவேண்டும். வெள்ளி மொச்சையில் தீபம் ஏற்ற வேண்டும், 6 - வெள்ளை தாமரையில் அர்சனை செய்யவேண்டும் ,வெள்ளை வஸ்திரம் சாற்றவேண்டும் , மல்லி,முல்லை, வெள்ளைசாமந்தி, வெள்ளை அரளிப்பூக்கள் உகந்தவை .

அபிசேக காலம் காலை : 8 மணிக்கு

அபிஷேகம் செய்யும் கிழமை: வெள்ளிக்கிழமை

அபிசேக கட்டணம் ரூ -350/-

உகந்த பிரசாதம் : வெள்ளைமொச்சை சுண்டல் ,கல்கண்டுபாத்

அருள்மிகு சரபேஸ்வரர் :

இத்தலத்தில் உள்ள சரபேஸ்வரர் சாந்தஸ் வரூபியான மூர்த்தியான உள்ளார். இவர் சரப பக்ஷி உருவம் எடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்தி உலகத்தை காப்பாற்றினார் இவரை செவ்வாய் ,வெள்ளி ,மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகி செல்லும் ,கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் மாந்திரிக சக்தியில் பிடியில் மீண்டுவரலாம் .

வழிபாடும் முறை :

6 வாரம் வரவேண்டும், 4 சுற்று வலம் வரவேண்டும் செவ்வாய் கிழமை ,வெள்ளி கிழமை,மற்றும் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் பிரதி ஞாயிற்றுக் கிழமை ராகு காலம் மற்றும் அம்மாவாசை தினங்களில் மாலை 6 மணி அளவில் இங்கு உள்ள சர்பேஸ்வரக்கு 11 கலசங்கள் வைத்து ஓமம் நடத்தி செய்வது வளாகம்

அபிஷேக காலங்கள் :

செவ்வாய் கிழமை

வெள்ளி கிழமை - காலை 8 மணிக்கும் 11 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேக கட்டணம் ரூ - 350/-

ஞாயிற்றுக் கிழமை:

ராகு காலம் கலசாபிஷேகம் 4.30pm மணி முதல் 6.00pm மணி வரை

அபிஷேக கட்டணம் ரூ - 400/-

அம்மாவாசை தினங்களில் மாலை 6 மணி முதல் 8.00 மணிக்கு வரை சரபேஸ்வர் ,சூலினிதுர்கை, ப்ரித்தியங்கரா,

கலசாபிஷேகம் கட்டணம் :ரூ - 450/-

திருச்சிற்றம்பலம்

Copyright © 2024 | Designed by Meetmilestone Designs Pvt Ltd.,