அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
சென்னை,மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் பிரதான சாலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை வெள்ளீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் முழுமையாகக் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் என வரலாறு அறியப்படுகிறது.
கண்ணோட்டம்
"திருமயிலைத் தல புராணம்" என்ற நூல் திரு.நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது.இந்த நூலில் வெள்ளீஸ்வரர் ஆலயம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயம் மயிலையைச் சுற்றி அமைந்துள்ள சப்த ஸ்தான தலங்களுள் மூன்றாவதாகக் கூறப்படுகிறது.
தலப்பெருமை
இழந்த கண் பார்வையை மீட்க, சுக்கிராச்சாரியார் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்ய,மயிலையில் குருந்த மரத்தின் கீழொரு சிவலிங்கம் ஸ்தாபித்து தவத்தைத் தொடர்ந்தார், தவ வலிமையைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காட்சித் தந்து சுக்கிராச்சாரியாருக்கு கண்ணொளி வழங்கி ஆசி புரிந்தார்.அந்த இடமே தற்போதுள்ள வெள்ளீஸ்வரர் ஆலயம் ஆகும்.
இவ்வாலய திருவிழாக்கள் ;
சிவராத்திரி உற்சவம்,ஆடிப்பூர உற்சவம்,மாணிக்கவாசகர் உற்சவம்,ஆருத்ரா தரிசனம்,நவராத்திரி உற்சவம்,சேக்கிழார் உற்சவம்,கந்த சஷ்டி உற்சவம் போன்றவைகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
ஆவனித் திங்களில் ஒட்டக்கூத்தர் பெருமானுக்கு இவ்வாலயத்தில் மட்டுமே உற்சவம் நடத்தப்படுகிறது.